பூசணி விதை நன்மைகள் Pumpkin Seeds Benefits In Tamil

பூசணி விதை நன்மைகள் Pumpkin Seeds Benefits In Tamil

பூசணி விதை நன்மைகள் Pumpkin Seeds Benefits In Tamil பூசணி விதை நன்மைகள்  பற்றி இப்பொழுது விரிவாக காணலாம் ஏனென்றால். இது நாம் அன்றாட வாழ்வில் எடுத்துக் கொள்ளும் ஒரு காய்கறியாகும். இதை எடுத்துக் கொள்பவர்களுக்கு அதன் பயன்கள் தெரிவதில்லை. மேலும் பூசணி விதை நன்மைகள் தெரிந்து கொண்டு அதை உணவில் எடுத்துக் கொண்டால் உங்களுக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை பூசணி விதை நன்மைகள் என்ற தலைப்பில் உங்களுக்காக பதிவிட்டுள்ளேன் படித்து பயன் பெறுக.

நீங்கள் தினமும் உணவு அருந்தும் பொழுது பலவகையான காய்கறிகளை நீங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது வழக்கமாக உள்ளது. அதிலும் பொதுவாக பூசணி விதை நமக்கு என்ன விதமான நன்மைகளை கொடுக்கும் என்பதை இப்பொழுது விரிவாக பார்க்கலாம்.

நீங்கள் தினசரி உணவுப் பழக்கங்களில் மிகவும் அதிக பயன்படக்கூடியது இந்த பூசணிக்காய்களும் பூசணி விதையும் ஆகும். எனவே பூசணி விதையை நம் உணவில் பயன்படுத்தினால் பல நோய்களுக்கு தீர்வு காணலாம் அது என்னென்ன நோய்கள் என்பதை இப்பொழுது பார்க்கலாம். அதற்கு முன்னதாக பூசணி விதை மற்றும் பூசணிக்காயில் உள்ள சில ஊட்டச்சத்து விஷயங்களை பார்க்கலாம்.

அனைத்து காய்கறிகளுமே ஊட்டச்சத்துக்கள் மற்றும் விட்டமின்களை கொண்டு இருக்கிறது அதிலும் அதிகமாக பூசணி விதையில் தான் ஊட்டச்சத்துக்களும் வைட்டமின்களும் அதிகமாகவே காணப்படுகிறது. 600 கலோரிகளை கொடுக்கக் கூடியது வெறும் 100 கிராம் பூசணி விதை. இதை நாம் அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டாலே போதும்  பலவிதமான நோய்களை எதிர்கொள்ளலாம்.

இப்பொழுது இந்த பூசணி விதைகள் எந்த மாதிரியான நோய்களை குணப்படுத்தக்கூடிய வல்லமை கொண்டது என்பதை இப்பொழுது விரிவாக பார்க்கலாம்.

பூசணி விதை மாரடைப்பை குணப்படுத்தும்

பூசணி விதை மாரடைப்பை குணப்படுத்தும் வல்லமை கொண்டது ஏனென்றால் இதில் அளவுக்கு அதிகமான ஊட்டச்சத்துக்கள் உடைய பண்பை கொண்டுள்ளது மேலும் மக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் உடலில் உள்ள கெட்ட ரத்தத்தின் அளவுகளை குறைக்கும் வல்லமை கொண்டது மேலும் ரத்த அழுத்தம் இருந்தால் அதனை சீர்படுத்தும் தன்னை கொண்டது.

உடலில் உள்ள கெட்ட ரத்தத்தின் அளவை குறைப்பதாலும் ரத்த அழுத்தத்தை குறைப்பதாலும் இதயம் ஆரோக்கியமாக இருக்கும் எனவே தினமும் பூசணி விதைகளை சாப்பிட்டு வந்தால் மாரடைப்பு போன்ற நோய்களிலிருந்து நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ளலாம்.

இதயம் பலவீனமானவர்கள் மற்றும் மாரடைப்பு வந்தவர்கள் அனைவருமே தினமும் ஒரு கைப்பிடி அளவிலான பூசணிக்காயின் விதைகளை எடுத்து உணவில் சேர்த்து உண்டு வந்தால் இதயம் சம்பந்தமான நோய்கள் மற்றும் மாரடைப்பு விரைவில் குணமாகும் ரத்த ஓட்டம் சீராகும் எனவே தினமும் நீங்கள் பூசணி விதையை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

பூசணி விதை நோய் எதிர்ப்பு  சக்தியை அதிகரிக்கும்

பூசணி விதை உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்திகளை குறைக்கும் அணுக்களில் இருந்து நம்மை காப்பாற்றி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் ஏனென்றால் இதழில் துத்தநாக சத்துக்கள் உள்ளதால் எளிதில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வல்லமை கொண்டது இந்த பூசணி விதை

நோய் எதிர்ப்பு சக்தி குறையும் பொழுது தான் நமது உடலில் பல்வேறு வகையான நோய்கள் வருவது நமக்கு நன்றாக தெரியும் எனவே தினமும் ஒரு கைப்பிடி அளவு பூசணி விதையை நீங்கள் உணவில் எடுத்துக் கொண்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.

பூசணி விதை சர்க்கரை நோயை குணப்படுத்தும்

பூசணி விதை சர்க்கரை நோயை குணப்படுத்துமா நிச்சயமாக குணப்படுத்தும் பூசணி விதைக்கு சர்க்கரை நோயை குணப்படுத்தும் வல்லமை உண்டு. பூசணி விதையில் ஒமேகா அமிலம் இருப்பதன் காரணமாக இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்யும் எனவே சர்க்கரை நோய் சம்பந்தமான எந்த நோயும் வராமல் பூசணி விதை நம்மளை காப்பாற்றுகிறது.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் பூசணி விதையை உணவில் எடுத்துக் கொண்டால் நிச்சயமாக சர்க்கரை நோய் கட்டுப்பாட்டுக்குள் வரும் சர்க்கரை நோய்க்கு எளிதில் நிவாரணம் கிடைக்கும்.

பூசணி விதை கல்லீரல் பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கும்

கல்லீரல் என்பது மனிதனுடைய ஒரு முக்கியமான உறுப்பு பகுதியாகும். அதில் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் பார்த்துக் கொண்டால் நம் வாழ்க்கை நலமாக அமையும். பூசணி விதை கல்லீரல் பிரச்சினைகளுக்கு தீர்வு அளிக்கும்.

மேலும் பூசணி விதையில் உள்ள கொழுப்பு சத்துக்களும் நார் சத்துக்களும் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸைடுகளும் நம் கல்லீரலில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் நம்மை பாதுகாக்கிறது எனவே கல்லீரலில் எந்த ஒரு பாதிப்புகள் இருந்தாலும் அல்லது பாதிப்புகள் வராமல் தடுக்கவும் பூசணி விதை நம் உணவில் எடுத்துக் கொண்டு வர கல்லீரல் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் தீர்வு அடையும்.

பூசணி விதை ஆழ்ந்த தூக்கத்திற்கு வழி செய்யும்.

நம் அனைவருக்குமே தூக்கமின்மை என்ற மிகப்பெரிய பிரச்சனைகள் உள்ளது தூக்கமின்மை என்பது ஒரு சிறிய பிரச்சினையாகவே நாம் கருதிக் கொண்டு வருகிறோம். அக்கால மனிதர்கள் விரைவாகவே உணவு அருந்திவிட்டு உறங்கச் சென்று விடுவார்கள் இப்பொழுது உள்ளது போல் டிவி போன்ற சாதனங்கள் இல்லை அக்கால கட்டங்களில் எனவே அக்காலகட்டங்களில் தூக்கமின்மை என்ற பிரச்சினை ஒரு சிறிய துரும்பாகவே இருந்து கொண்டு இருந்தது.

ஆனால் இக்கால கட்டங்களில் நாம் பல்வேறு வகையான பிரச்சனைகளை தினம் தோறும் சந்தித்து வருகிறோம் அதிலும் குறிப்பாக தூக்கமின்மை இதற்கு காரணம் என்னவென்றால் நாம் செல்போன்களை பயன்படுத்துகிறோம் தினமும் பல்வேறு வகையான பிரச்சனைகளை நாம் சந்திப்பதன் காரணமாக மன அழுத்தங்கள் மற்றும் இது போன்ற சில காரணங்களால் நமக்கு தூக்கம் சரிவர வருவதில்லை எனவே பூசணி விதையை நாம் உட்கொண்டு வந்தால் அல்லது பூசணி நம் உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் தூக்கமின்மை என்ற ஒன்று நம்மை விட்டு விலகி விடும் நிம்மதியான உறக்கம் தினமும் நமக்கு அவசியம் எனவே தூக்கமின்மையால் சிரமப்படும் அனைவருக்கும் பூசணி விதை நல்ல ஒரு மருந்தாகவும் ஊட்டச்சத்துள்ள உணவாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும் இது நம் தூக்க சக்தியை அதிகரிக்கும்.

உட்காயங்களை போக்கக்கூடிய பூசணி விதை

இந்த பூசணி விதையில்  anti inflammatory என்ற ஒன்று உடலில் உள்ள உட்காயங்களை ஆற்றும் வல்லமை கொண்டது.

பொதுவாகவே உடம்பில் உட்காயங்களுக்கு மருந்திடுவது என்பது சவாலை உள்ள ஒரு விஷயமாகும் எனவே உடலில் உங்களுக்கு ரத்தக் கட்டுக்கள் காயங்கள் உள் வழிகள் ஏதேனும் இருந்தால் நீங்கள் தினமும் பூசணி விதைகளை எடுத்துக் கொண்டால் உங்களுடைய உட்காயங்கள் குணமாகி இரத்தக் கட்டுகள் இருந்தால் அது சீராகும்.

பூசணி விதை உடல் வலிமையை அதிகரிக்கும்.

இன்றைய காலகட்டங்களில் உடல் வலிமையை அதிகரிக்க பல்வேறு வகையான ஆங்கில மருந்துகளை பயன்படுத்துகிறோம் அன்றைய காலங்களில் நமது முன்னோர்கள் அவ்வளவு உடல் வலிமை பெறுவதற்கு இது போன்ற உணவுப் பழக்கம் பின்பற்றி வருகின்றனர்

எனவே குடல் வலிமையை அதிகரிக்க பூசணி விதை மிகப் பெரிய பங்கினை வகிக்கிறது. பூசணி விதை அதை எடுத்து காய வைக்க வேண்டும் பின்பு அதனை பொடி செய்து தினமும் எடுத்துக்கொண்டு வந்தால் உங்களுக்கு உடல் வலிகள் அனைத்தும் நீங்கி மற்றும் உடல் சோர்வுகள் அனைத்தும் நீங்கி உங்களது உடல் வலிமை பெறும் எனவே தினமும் பூசணி விதையை நீங்கள் எடுத்துக் கொள்ள வழி செய்யுங்கள் நோய் நொடி இல்லாத வாழ்க்கையை பெறுங்கள். உடல் வலிமையும் அதிகரிங்கள்.

பூசணி விதை மாதவிடாய் பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும்

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் பல்வேறு வகையான தொந்தரவுகளை சந்திப்பார்கள் அவர்களுக்காக இந்த ஒரு பதிவு மாதவிடாய் சம்பந்தமான எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் சரி இந்த பூசணி விதைகள் நல்ல தீர்வினை அழிக்கும். பூசணி விதையை நீங்கள் நெய்யில் வறுத்து அதை தினமும் உண்டு வந்தால் மாதவிடாயில் ஏற்படக்கூடிய வலி மற்றும் வெள்ளைப் போக்கு போன்ற பிரச்சனைகள்  விரைவில் குணமாகும்.

பூசணி விதை ஆண்மையை அதிகரிக்கும்.

பூசணி விதைகள் ஆண்களுக்கு மிகவும் நன்மை விளைவிக்கும் எவ்வாறெனில் ஆண்களின் ஆண்மையை அதிகரிக்க கூடிய ஊட்டச்சத்துக்கள் இந்த பூசணி விதையில் உள்ளது. 

இந்த பூசணி விதைகளை நீங்கள் பொடியாக அரைத்து அதை தினம் சரி பாலில் கலந்து குடித்து வந்தால் உங்களுக்கு அண்மை அதிகரிக்கும் உடல் உஷ்ணங்கள் குறைய பூசணி விதை பயன்படும்.

மேலும் ஆண்களின் விந்தணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்கவும் விந்தணுக்கள் உற்பத்தியை அதிகரிக்கவும் இந்த பூசணி விதை பயன்படுகிறது.

முதுமை காலப் பிரச்சினைகளுக்கு தீர்வு பூசணி விதை

வயதில் மூத்தோர்கள் மற்றும் முதியவர்கள் ஊட்ட சத்தின் குறைபாட்டின் காரணமாக எலும்புகளோட அடர்த்தி குறைய ஆரம்பிக்கும் எனவே எலும்பு சம்பந்தமான சில பிரச்சனைகள் ஏற்பட காரணமாக அமைகிறது முதியவர்களுக்கு. எனவே நீங்கள் பூசணி விதையை தினமும் எடுத்துக் கொண்டு வந்தால் உங்களின் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும் மேலும் மூட்டு சம்பந்தமான எந்த ஒரு பிரச்சனைகளும் வராமல் பூசணி விதை தடுக்கிறது.

புற்று நோய்க்கு பூசணி விதைகள் பயன்படுகிறது

புற்று நோய்க்கு மருந்தாக பைட்டோ கெமிக்கல்ஸ் புற்றுநோயை தடுக்க முக்கிய பங்கு வைக்கிறது நீங்கள் தினமும் பூசணி விதையை நீங்கள் எடுத்துக் கொண்டு வந்தால் புற்றுநோய் வராமல் தடுக்கலாம் மேலும் பெண்களுக்கு ஏற்படக்கூடிய மார்பக புற்றுநோய் செல்களின் வளர்ச்சிகளை வெகு விரைவாக தடுக்க உதவுகிறது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனவே பெண்களும் ஆண்களும் பூசணி விதையை எடுத்துக் கொண்டால் புற்றுநோய் போன்ற நோயிலிருந்து விடுபடலாம் மேலும் வராமலும் தடுக்கலாம்.

Also Read:

Spread the love

1 thought on “பூசணி விதை நன்மைகள் Pumpkin Seeds Benefits In Tamil”

Leave a Comment