பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | எஸ். பி. பாலசுப்ரமணியம் & பி. சுசீலா | எம்.எஸ்.விஸ்வநாதன் & இளையராஜா | மெல்ல திறந்தது கதவு |
Dhil Dhil Dhil Song Lyrics in Tamil
ஆண் : தில் தில் தில் தில்… மனதில்…
ஒரு தல் தல் தல் தல்… காதல்…
ஆண் : தில் தில் தில் தில் மனதில்…
ஒரு தல் தல் தல் தல் காதல்…
ஆஹா… தில் தில் தில் தில் மனதில்…
ஒரு தல் தல் தல் தல் காதல்…
பெண் : ஜில் ஜில் இள நெஞ்சில்…
ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்…
ஜில் ஜில் இள நெஞ்சில்…
ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்…
ஆண் : ஆடல் பாடல் கூடல்…
பெண் : ஆஆ… தில் தில் தில் தில் மனதில்…
ஒரு தல் தல் தல் தல் காதல்…
—BGM—
பெண் : வளர்ந்த நாள் முதல் கார்குழலும்…
அழைக்குதே உன்னை பூச்சூட…
ஆண் : மயக்கம் ஏனடி பூங்குயிலே…
தவிக்கிறேன் அடி நான் கூட…
பெண் : விளக்கு வைத்தால் துடித்திருப்பேன்…
படுக்கையில் நான் புரண்டிருப்பேன்…
ஆண் : கைகள் படாத இடம்தான் இப்போது…
ஆசை விடாத சுகம்தான் அப்போது…
பெண் : ஏக்கம் ஏதோ கேட்கும்…
ஆண் : தில் தில் தில் மனதில்…
ஒரு தல் தல் தல் காதல்…
பெண் : ஜில் ஜில் இள நெஞ்சில்…
ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்…
ஜில் ஜில் இள நெஞ்சில்…
ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்…
ஆண் : ஆடல் பாடல் கூடல்…
பெண் : ஆஆ… தில் தில் தில் மனதில்…
ஒரு தல் தல் தல் காதல்…
—BGM—
ஆண் : மழைக்கு ஏங்கிய மாந்தளிரே…
உனக்கு நான் சிறு தூறல்தான்…
பெண் : வியர்த்து வாடிய மெய் சிலிர்க்க…
உனக்கு நான் மலைச்சாரல்தான்…
ஆண் : அடுத்த கட்டம் நடப்பதெப்போ…
எனக்கு உன்னைக் கொடுப்பதெப்போ…
பெண் : மாலை இடாமல் வசந்தம் வராது…
வேளை வராமல் பெண் உன்னைத் தொடாது…
ஆண் : போதும் போதும் ஊடல்…
பெண் : ஆஆ… தில் தில் தில் தில் மனதில்…
ஒரு தல் தல் தல் தல் காதல்…
ஆண் : ஆஹா… தில் தில் தில் தில் மனதில்…
ஒரு தல் தல் தல் தல் காதல்…
பெண் : ஜில் ஜில் இள நெஞ்சில்…
ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்…
ஆண் : ஜில் ஜில் இள நெஞ்சில்…
ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்…
பெண் : ஆடல் பாடல் கூடல்…
Notes : Dhil Dhil Dhil Song Lyrics in Tamil. This Song from Mella Thiranthathu Kadhavu (1986). Song Lyrics penned by Vaali. தில் தில் தில் பாடல் வரிகள்.
The post தில் தில் தில் appeared first on Tamil Padal Varigal.